Skip to main content

Posts

Showing posts from January, 2018

காரைக்குடி சிக்கன் கறி

காரைக்குடி சிக்கன் கறி சுவையான காரைக்குடி சிக்கன் கறி செய்வது எப்படி என்று பார்க்கலாம்  தேவையானவை: சிக்கன் - அரை கிலோ வெங்காயம் - ஒன்று (பெரியது) தக்காளி - 2 கறிவேப்பிலை - 2 கொத்து சோம்பு - கால் தேக்கரண்டி (தாளிக்க) உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப சாம்பார் பொடி / மிளகாய் தனியா தூள் கலவை - 2 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 2 (அ) மிளகு - 2 தேக்கரண்டி (விரும்பினால்) இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - சிறிது அரைக்க: மிளகு - ஒரு தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 6 தனியா - 4 தேக்கரண்டி பட்டை - ஒரு துண்டு கிராம்பு - 5 ஏலக்காய் - 4 மராத்தி மொக்கு - சிறிது ஜாதிக்காய் - கால் பாகம் கறிவேப்பிலை - 8 கொத்து தேங்காய் துருவல் - 4 மேசைக்கரண்டி செய்முறை :- சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து மஞ்சள் தூள், சிறிது உப்பு மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பிரட்டி வைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைக்க கொடுத்துள்ளவற்றில் தேங்காய் துருவல், கறிவேப்பிலை தவிர மற்ற அனைத்தையும் சேர்த்து லேசாக சிவக்க வறுக்கவும். அதன் பிற...

செட்டிநாடு எலும்பு சூப்

எலும்பு சூப் தேவையானவை : ஆட்டு எலும்பு - 1/2 கிலோ தக்காளி - 1/4 கிலோ வெங்காயம் - 1/4 பச்சை மிளகாய் - 2 அரைக்க தேவையானவை :   இஞ்சி - 10 கிராம், பூண்டு - 10 கிராம்,  மிளகு தூள் - 2 தேக்கரண்டி, ரொட்டித்தூள் - சிறிதளவு,  எலுமிச்சம்பழம் - பாதி, சீரகதூள் - 2 தேக்கரண்டி, தனியாதூள் - 2 தேக்கரண்டி, கொத்தமல்லி இலை - 1/2 கட்டு, நெய் - 50 கிராம்,  சர்க்கரை - 1/2 தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு, செய்முறை : 1. தக்காளியை சுத்தம் செய்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.  2. ஒரு அகன்ற பாத்திரத்தில் நெய்யை ஊற்றி, சூடானதும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும். அது பொன்னிறமானதும், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து, எலும்பையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.  3. பின் மிளகு தூள், சீரகதூள், தனியாதூள், கொத்தமல்லி இலை சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரைச் சேர்த்து மூடி விடவும். தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். 1/4 லிட்டர் நீரைச் சுண்ட வைக்கவும். பின் அரைத்த தக்காளி  சேர்த்து சூப்பை இறக்கவும். பின் சூப்பை வடிகட்டி ...