செட்டிநாடு நண்டு மசாலா
நீங்கள் ஆசை பட்டதை வாங்கி சமைத்து குடும்பத்திற்கு பரிமாறிவிட்டு நீங்கள் சாப்பிட்டு பாருங்கள் ,அந்த "ருசியும் திருப்தியும் " எந்த ஹோட்டல் க்கு போனாலும் கிடைக்காது. இது நிதர்சனமான உண்மை...
இந்த ருசிகரமான நேரத்தில் செட்டிநாடு நண்டு மசாலா வறுவல் எப்படி செய்வது என்று பார்ப்போம்...
தேவையான பொருள்கள்:
நண்டு - 500 கி
பெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது) – 1
தக்காளி (பொடியாக நறுக்கியது) – 2 அல்லது 3
மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைத்துக் கொள்ள:
தேங்காய் – 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
பூண்டு – 15 பல்
மிளகு – 1 டேபிள்ஸ்பூன்
சோம்பு – 1 தேக்கரண்டி
கசகசா - 1 தேக்கரண்டி
தாளிக்க:
பட்டை - சிறிய துண்டு
கல் பாசி – சிறிது
சோம்பு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
செய்முறை:
- முதலில் நண்டு ஓட்டை நீக்கி விட்டு, நன்றாக தண்ணீரில் கழுவி எடுத்து, தேவையான சைஸில் துண்டுகளாக்கி வைக்கவும்.
- அரைக்க கொடுத்துள்ளவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து திக்கான விழுதாக்கி வைத்து கொள்ளவும்.
- ஒரு அகலமான வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் தாளிக்கும் பொருட்களை சேர்த்து வறுக்கவும்.
- பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
- பின், அரைத்த மசாலா சேர்த்து 2 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கியதும், சுத்தம் செய்து வைத்துள்ள நண்டை சேர்த்து வதக்கவும். இத்துடன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து, நன்றாக கலந்து மூடி வைத்து வகை வைக்கவும். இடையிடையே கிளறி விடவும்.
- நண்டு நன்றாக வெந்து தேவையான கிரேவி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கவும்.
குறிப்பு:
பச்சை மிளகாய் காரத்துக்கேற்ப கூட்டியோ, குறைத்தோ கொள்ளலாம்.
Comments
Post a Comment