Skip to main content

Posts

Showing posts from July, 2017

குலாப் ஜாமூன்

குலாப் ஜாமூன்  அனைவரும் விரும்ப கூடிய இனிப்பு வகைகளில் இதுவும் ஒன்று , இதை சரியான முறையில் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் பொதுவாக மக்கள் தீபாவளி க்கு தான் செய்து சாப்பிடுவார்கள் ,குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு இது . தேவையான பொருள்கள்: பால் பவுடர் - 2 1/2 கப் பால் - தேவையான அளவு (கலப்பதற்கு) நெய்  - 2 மேசைக்கரண்டி சர்க்கரை - 5 கப் பேக்கிங் பவுடர் - சிறிது மைதா மாவு - 2 மேசைக்கரண்டி எண்ணெய்  - அரை கப் (பொரிப்பதற்கு) செய்முறை : முதலில், பால் பவுடருடன் மைதா மாவு, பேக்கிங் பவுடர், நெய் சேர்த்து, தேவைக்கேற்ப பால் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.  பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 5 கப் சர்க்கரையைப் போட்டு, அத்துடன் 5 கப் தண்ணீர் ஊற்றிக் கரைத்து அடுப்பில் வைத்து ஒரு கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சவும். மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து நெய் அல்லது எண்ணெய் ஊற்றிக் காயவிடவும். காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு சிவக்க பொரித்தெடுத்து சர்க்கரைப் பாகில் போடவும். அனைத்து உருண்டைகளையும் போட்ட பிறகு, 5 நிம...

கோபி 65 (Cauliflower 65)

கோபி 65 (Cauliflower 65) காலிஃப்ளவரில் உடலுக்கு தேவையான வைட்டமின் ' சி ' உள்ளது , இவை இதய நோய்கள் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து நம்மை காக்கின்றது , காலிஃப்ளவரய் தினமும் சமையலில் சேர்த்து கொள்ளலாம் .   தேவையான பொருட்கள் : பெரிய காலிஃப்ளவர் - 1 சோளமாவு - 4 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன் சமையல் சோடா - 1 சிட்டிகை இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்க மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன் செய்முறை : காலிஃப்ளவரை பெரிய துண்டுகளாக வெட்டி கொதிக்கும் வெந்நீரில் சிறிது உப்பு போட்டு 2 நிமிடம் போட்டு எடுக்கவும். இதனால் அதில் கண்ணிற்கு தெரியாத பூச்சிகள் இருந்தாலும் இறந்துவிடும். ஒரு அகலமான பாத்திரத்தில் காலிஃப்ளவரை கொட்டி அதன் மீது சோளமாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், கரம் மசாலாதூள், சமையல் சோடா, உப்பு, இஞ்சி பூண்டு விழுது மைதா மாவு உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் தூவி கலக்கவும். அதிக உலர்வாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாக கலந்து பின்னர் அரை மணி நேரம் ஊறவிடவும். ...

மொச்சை கத்திரிக்காய் குழம்பு

மொச்சை கத்திரிக்காய் குழம்பு மொசைக்கு ஒரு நல்ல சுவையுண்டு. புரதச்சத்து, கால்சியம், அமினோ அமிலம் போன்ற சத்துக்கள் நிறைந்தது மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மை கொண்டது. இந்த மொச்சை கத்திரிக்காய் குழம்பு சூடான சாதம், இட்லி, தோசை மற்றும் கொழுக்கட்டைக்கு நல்ல பொருத்தமானது. தேவையான பொருட்கள்: மொச்சை-1/2 கோப்பை கத்திரிக்காய் பிஞ்சாக-5 பூண்டு-7 பல் சின்ன வெங்காயம்- 9 கறிவேப்பிலை-1 கொத்து தக்காளி-1 உப்பு-1 1/2 தே.க மஞ்சள் தூள்-1/4 புளிச்சாறு -2 மேஜைக்கரண்டி சாம்பார் மிளகாய்ப்பொடி-2 1/2 தேக்கரண்டி அல்லது தனி மிளகாய்த்தூள் -1 1/2, மல்லித்தூள்-1 தேக்கரண்டி தளிக்க : எண்ணெய் -1 1/2 மேஜைக்கரண்டி சோம்பு-1 தே.க சீரகம்-1/2 தே.க வெந்தயம்-1/4 தே.க செய்முறை:   மொச்சையை 6 மணிநேரம் ஊறவைக்கவும். குக்கரில் 2 விசில் வேக வைத்துக்கொள்ளவேண்டும். கத்திரிக்காயை நான்காக வெட்டிக்கொள்ளவும். வெங்காயம் பூண்டு தோலுரித்து நறுக்கிக்கொள்ளவும்.                           தக...