கோபி 65 (Cauliflower 65)
காலிஃப்ளவரில் உடலுக்கு தேவையான வைட்டமின் ' சி ' உள்ளது ,
இவை இதய நோய்கள் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து நம்மை காக்கின்றது ,
காலிஃப்ளவரய் தினமும் சமையலில் சேர்த்து கொள்ளலாம் .
தேவையான பொருட்கள் :
- பெரிய காலிஃப்ளவர் - 1
- சோளமாவு - 4 டேபிள் ஸ்பூன்
- அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
- சமையல் சோடா - 1 சிட்டிகை
- இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - பொரிக்க
- மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
- காலிஃப்ளவரை பெரிய துண்டுகளாக வெட்டி கொதிக்கும் வெந்நீரில் சிறிது உப்பு போட்டு 2 நிமிடம் போட்டு எடுக்கவும். இதனால் அதில் கண்ணிற்கு தெரியாத பூச்சிகள் இருந்தாலும் இறந்துவிடும்.
- ஒரு அகலமான பாத்திரத்தில் காலிஃப்ளவரை கொட்டி அதன் மீது சோளமாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், கரம் மசாலாதூள், சமையல் சோடா, உப்பு, இஞ்சி பூண்டு விழுது மைதா மாவு உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் தூவி கலக்கவும். அதிக உலர்வாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாக கலந்து பின்னர் அரை மணி நேரம் ஊறவிடவும்.
- வாணலியில் எண்ணெயை ஊற்றி நன்றாக சூடானதும் அதில் ஊறவைத்த காலிஃப்ளவரை போட்டு பொரித்தெடுக்கவும்.
- மொறு மொறுப்பான கோபி 65 தயார். கொத்துமல்லி தூவி,எலுமிச்சை மற்றும் நறுக்கிய பெரிய வெங்காயம் வைத்து பரிமாறவும் .
really good snack
ReplyDelete