Skip to main content

தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய உணவுகள்

தினமும் காலை வெறும் வயிற்றில் பின்வரும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதாேடு, உடல் பலமாகவும், தேகம் பளிச்சுடனும் காணப்படும். அவை என்னவென்று பாா்ப்பாேம்...
தினமும் காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் இளஞ்சூடான நீர் அருந்துவதன்மூலம் உடல் எடை குறையும். கழிவுகள் வெளியேறும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். சருமம் இளமையாகும். புத்துணர்வு கிடைக்கும். செரிமானம் சீராகும்.  மலச்சிக்கலைச் சரிசெய்யும்.
வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீர் அல்லது சீரகத் தண்ணீர் போன்றவற்றை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம். வெந்தய நீர் குளிர்ச்சியைத் தந்து, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். சீரகத் தண்ணீர் அஜீரணக்கோளாறுகளை நீக்கி, உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.
இளஞ்சூடான நீரில் தேன் கலந்து அருந்தினால், உடலுக்கு பலம் தரும். சளி மற்றும் இருமலுக்கு நல்ல மருந்து. குரலை மென்மையாக்கும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். வயிற்று எரிச்சலைக் குறைக்கும். செரிமானத்துக்கு உதவும். மலச்சிக்கலைச் சரிசெய்யும். தூக்கமின்மையைப் போக்கும். உடல் எடையைக் குறைக்கும்.
கேரட், முள்ளங்கி, வெள்ளரி போன்றவற்றைப் பச்சையாகவே சாப்பிடலாம். காய்கறிகளின் சாறு, உடலைச் சுத்தப்படுத்தும். ரத்தத்தை விருத்தியாக்கும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். உடல் எடையைக் குறைக்க உதவும். சருமத்தைப் பளபளப்பாக்கும். கொழுப்பைக் குறைக்கும்.
அரிசிக்கஞ்சி உடலில் உள்ள நச்சு நீரை வெளியேற்றுவதால், உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. எளிதில் செரிமானம் ஆகும். சளி சவ்வுப் படலத்தில் உண்டாகும் புண்களை ஆற்றும். கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும். கஞ்சி, இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உடல் வெப்பத்தைக் குறைக்கும். கஞ்சியில் வைட்டமின் பி-6, பி-12 அதிகமாக உள்ளன. வயது முதிர்ந்த தோற்றத்தையும் எலும்பு சார்ந்த நோய்களையும் சரி செய்யும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். அரிசிக் கஞ்சியை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ளக் கூடாது.
வெறும் வயிற்றில் பழங்கள் மற்றும் ஜூஸ்களை எடுத்துக்காெள்வதால்,  உடல் ஆரோக்கியம் பெறும். உடலின் சக்தி அதிகரிக்கும். சருமம் பொலிவு பெறும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் கிவி, ஆப்பிள், ஆரஞ்சு, தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் பப்பாளி போன்ற பழங்களை எடுத்துக்கொள்வது நல்லது. அதுபோல வாழை, ஆரஞ்சு ஆகியவற்றை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது. பழங்களை வேகவைத்துச் சாப்பிடக் கூடாது.
முளைக்கட்டிய பயறில் வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், புரோட்டின், என்சைம்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் போன்ற சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் சூரியக் கதிரில் இருந்து நம் சருமத்தைப் பாதுகாக்கிறது; தோல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது. இதய நோயில் இருந்து நம்மைக் காக்கும். உடல் எடையைக் கட்டுப்படுத்தும். வாயுத்தொல்லை உடையவர்கள், அலர்ஜி ஏற்படுகிறவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.
பச்சரிசி, உளுந்தைத் தனித்தனியாக அரைத்துவைத்துக்கொள்ள வேண்டும். 100 கிராம் அரிசி மாவுக்கு, 25 கிராம் உளுந்து என்ற அளவில் சேர்த்து, வெல்லம் சேர்த்து, களியாகக் கிண்டிச் சாப்பிடலாம். பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் உளுத்தங்களி மிகவும் உகந்தது. மேலும், வெள்ளைப்படுதல் பிரச்னைக்கும் சிறந்த பலனைத் தரும்.

Comments

Popular posts from this blog

செட்டிநாடு சாம்பார் பொடி தயாரிக்கும் முறை

செட்டிநாடு சாம்பார் பொடி தென் இந்தியாவில் புகழ் பெற்றது சாம்பார், பாரம்பரிய உணவான இந்த சாம்பார் அன்றாட உணவில் முக்கிய இடம்வகிக்கிறது. சாம்பாரின் சுவை ரகசியம் சாம்பார் பொடி, இந்த சாம்பார் பொடி கூடுதல் சுவையும், மனமும் அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. தேர்தெடுக்கப்பட்ட மசாலா பொருட்களை குறிப்பான விகிதத்தில் கலந்து பக்குவமாய் வறுத்து அரைப்பதே இந்த செட்டிநாடு சாம்பார் மசாலாவின் தனிச்சிறப்பு. கடைகளில் கூடுதல் விலைக்கு வாங்கும் சாம்பார் பொடியை விட பல மடங்கு பயனளிக்கக்கூடியது, கணிசமும் அதிகம். இதை ஆறு மாதம் வரை காற்று புகாத கொள்கலனில் அடைத்து வைத்து பயன்படுத்தலாம். இது சாம்பார், காரக்குழம்பு கூட்டு, மசாலா வகை, பொரியல்,பச்சடி,மற்றும் சைவம், அசைவம் இரண்டுக்கும் ஏற்றது . தேவையான பொருட்கள் : சிவப்பு மிளகாய் – 1 கிலோ மல்லி – 1 கிலோ சோம்பு -200 கிராம் சீரகம் – 200 கிராம் வெந்தயம்- 100 கிராம் பெருங்காயம் – 50 கிராம் மஞ்சள் -50 கிராம் மிளகு – 50 கிராம் கடலை பருப்பு-100 கிராம் துவரம் பருப்பு- 50 கிராம் பச்சரிசி – 50 கிராம். செய்முறை : ஒவ்வொன்றையும் தனித்தனியாக வாணலியில் எண்ணெய...

செட்டிநாடு காளான் மசாலா

செட்டிநாடு காளான் மசாலா 😍😙😍 தேவையான பொருட்கள் : காளான் - அரை கிலோ எண்ணெய் - இரண்டு டீஸ்பூன் பட்டை - ஒன்று லவங்கம் - ஒன்று ஏலக்காய் - ஒன்று சின்ன வெங்காயம் - 200 கிராம் தக்காளி - இரண்டு இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் - இரண்டு கறிவேப்பில்லை - சிறிதளவு மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் மிளகாய் தூள் - இரண்டு டீஸ்பூன் தனியா தூள் - இரண்டு டீஸ்பூன் உப்பு - தேவைகேற்ப மிளகு தூள் - அரை டீஸ்பூன் சீரக தூள் - அரை டீஸ்பூன் சோம்பு தூள் - அரை டீஸ்பூன் கரம் மசாலா - அரை டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிதளவு செய்முறை :   வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.   கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளித்த பின் சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.   வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பின், அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, மிளகு தூள், சீரக தூள்...

சிக்கன் சுக்கா வறுவல்

 சிக்கன் சுக்கா வறுவல் சிக்கன் சுக்கா வறுவல் வறுவல் வகைகளில் மிகவும் சுவையான சிக்கன் சுக்கா வறுவல். செட்டிநாடு மசாலா கலவையில் சிக்கனை வறுத்து சாப்பிட்டுப் பாருங்கள், ருசி நாக்கில் தாண்டவம் ஆடும். தேவையான பொருட்கள் சிக்கன் - 1/2 கிலோ வெந்தயம் - ஒரு டீஸ்பூன் பட்டை, லவங்கம், ஏலக்காய் - 4 மிளகு, சோம்பு, சீரகம் - தலா 2 டீஸ்பூன் மராட்டி மொக்கு - 3 அன்னாசிப்பூ - 3 கடற்பாசி - 5 இதழ் தனியா - 4 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 6 பச்சைமிளகாய் - 4 இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன் வெங்காயம் - 250 கிராம் (நறுக்கியது) தக்காளி - 250 கிராம் (நறுக்கியது) மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப கொப்பரைத் தேங்காய் - தேவைப்பட்டால் சேர்க்கலாம். செய்முறை :   வாணலியை அடுப்பில் வைத்து தனியா, மிளகாய், லவங்கம், ஏலக்காய், பட்டை, கடல்பாசி, மிளகு, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை (தேவைப்பட்டால் கொப்பரைத் தேங்காய் சேர்க்கலாம்) ஆகியவற்றை வெறுமனே வறுத்து ஆற வைத்து பொடி செய்து கொள்ளவும்.   அடுப்பில் மற்றொரு பாத்திரத்தை வைத்து ஒரு குழிக்கரண்டி எண்ணெய்...