அவசரமான உலகில் நாம் அனைவரும் கடிகாரத்தின் நொடிமுள் போல ஓடிக்கொண்டிருக்கிறோம் ... காலை எழுந்து அனைத்தையும் சமைத்துவிட்டு வேலைக்கு செல்வது கடினமாகிவிட்டது .. அப்போது இந்த தக்காளி ப்யூரி செய்து வைத்து கொண்டால் soup , spaghetti , pasta , chutney , ஆகிய dish களுக்கு base ஆக பயன்படுத்திக்கொள்ளலாம் .
தேவையான பொருட்கள்
தண்ணீர்
தக்காளி 5
Vinegar or Lime juice
செய்முறை
பாத்திரத்தில் வேகவைக்கும் அளவிற்கு தண்ணீர் எடுத்துக்கொள்ளவேண்டும்
தண்ணீரை கொதிக்க விட வேண்டும்
பிறகு நன்கு கொதித்தவுடன் தக்காளியை அதில் போட வேண்டும் .
பின்பு தக்காளியின் தோல் உரியும் வரை வேகவைக்க வேண்டும் .
தோல் உரியும் பொழுது stove வை Off செய்து விட்டு ஆறும் வரை காத்திருக்க வேண்டும் .
பின்பு தக்காளியை எடுத்து தோல் உரித்து வைக்க வேண்டும் .
பிறகு Mixie ல் நன்கு அரைத்து கொள்ள வேண்டும் ..
தக்காளி ப்யூரி ready !!!
"அந்த தக்காளி ப்யூரி யை அப்போதே உபயோகம் செய்யலாம்"
"அதை பதப்படுத்தியும் வைத்துக்கொள்ளலாம்" .
பதப்படுத்தும் முறை
நன்கு அரைத்து எடுத்த பின்பு அதை நன்கு வடிகட்டி கொள்ளவேண்டும் (தக்காளி விதைகள் இல்லாமல்) .
பின்பு அதில் 3 tsp vinegar அல்லது lime juice சேர்த்து
ice tray ல் ஊற்றி freezer வைத்து ..அவை ஐஸ் ஆக மாறிய பின்பு
ZIPLOCK cover ல் வைத்து freezer ல் வைத்து விடலாம் ..
மூன்று மாதம் வரை இதை பயன் படுத்தலாம்
"மேலும் விவரங்களுக்கு கீலே விடியோவை பார்க்கவும் "
VIDEO LINK : How to make Tomato puree in Tamil
Comments
Post a Comment