Skip to main content

செட்டிநாடு மிளகாய் சட்னி

"Chettinad மிளகாய் சட்னி என்றாலே இட்லி, தோசை கொஞ்சம் அதிகமாவே சாப்பிடுவோம்"...😙😙😙

அதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம் வாங்க !!!



மிளகாய் சட்னி


தேவையான பொருட்கள்:

காய்ந்த மிளகாய் - 15 அல்லது 20, 

புளி - சிறிய எலுமிச்சையளவு,

கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு,

 எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை:


 வாணலியில்  சிறிதளவு எண்ணெய் ஊற்றி, மிளகாயை நிறம் மாறாமல் வறுக்கவும். அடுப்பை அணைத்து விட்டு புளி, உப்பு சேர்த்து வறுக்கவும். ஆறவிட்டு நைஸாக அரைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து,  அரைத்து வைத்திருக்கும் சட்னியில் சேர்க்கவும்.



குறிப்பு: சட்னியின் மேலே எண்ணெய் நிற்குமாறு இருக்க வேண்டும்.
"தேவைப்பட்டால் சிறிதளவு  பூண்டு சேர்த்துக்கொள்ளலாம்" 
ரோஜாப்பூ நிறத்தில் இருக்கும் இதற்கு 'ரோஜாப்பூ சட்னி’ என்றே பெயர். பணியாரம், இட்லி, தோசைக்கு சிறந்த காம்பினேஷன்.

Comments

  1. Yummy it looks. Delicious the outcome is.

    Waiting for NV recipes author. :)

    ReplyDelete
    Replies
    1. Thanks for your comment ,
      Definitely we will give lot of Tasty chettinad NV recipes ASAP

      Delete
  2. I tried this method ,all of my family members ate more idlys , ery tasty ,thanks

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

செட்டிநாடு சாம்பார் பொடி தயாரிக்கும் முறை

செட்டிநாடு சாம்பார் பொடி தென் இந்தியாவில் புகழ் பெற்றது சாம்பார், பாரம்பரிய உணவான இந்த சாம்பார் அன்றாட உணவில் முக்கிய இடம்வகிக்கிறது. சாம்பாரின் சுவை ரகசியம் சாம்பார் பொடி, இந்த சாம்பார் பொடி கூடுதல் சுவையும், மனமும் அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. தேர்தெடுக்கப்பட்ட மசாலா பொருட்களை குறிப்பான விகிதத்தில் கலந்து பக்குவமாய் வறுத்து அரைப்பதே இந்த செட்டிநாடு சாம்பார் மசாலாவின் தனிச்சிறப்பு. கடைகளில் கூடுதல் விலைக்கு வாங்கும் சாம்பார் பொடியை விட பல மடங்கு பயனளிக்கக்கூடியது, கணிசமும் அதிகம். இதை ஆறு மாதம் வரை காற்று புகாத கொள்கலனில் அடைத்து வைத்து பயன்படுத்தலாம். இது சாம்பார், காரக்குழம்பு கூட்டு, மசாலா வகை, பொரியல்,பச்சடி,மற்றும் சைவம், அசைவம் இரண்டுக்கும் ஏற்றது . தேவையான பொருட்கள் : சிவப்பு மிளகாய் – 1 கிலோ மல்லி – 1 கிலோ சோம்பு -200 கிராம் சீரகம் – 200 கிராம் வெந்தயம்- 100 கிராம் பெருங்காயம் – 50 கிராம் மஞ்சள் -50 கிராம் மிளகு – 50 கிராம் கடலை பருப்பு-100 கிராம் துவரம் பருப்பு- 50 கிராம் பச்சரிசி – 50 கிராம். செய்முறை : ஒவ்வொன்றையும் தனித்தனியாக வாணலியில் எண்ணெய...

செட்டிநாடு காளான் மசாலா

செட்டிநாடு காளான் மசாலா 😍😙😍 தேவையான பொருட்கள் : காளான் - அரை கிலோ எண்ணெய் - இரண்டு டீஸ்பூன் பட்டை - ஒன்று லவங்கம் - ஒன்று ஏலக்காய் - ஒன்று சின்ன வெங்காயம் - 200 கிராம் தக்காளி - இரண்டு இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் - இரண்டு கறிவேப்பில்லை - சிறிதளவு மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் மிளகாய் தூள் - இரண்டு டீஸ்பூன் தனியா தூள் - இரண்டு டீஸ்பூன் உப்பு - தேவைகேற்ப மிளகு தூள் - அரை டீஸ்பூன் சீரக தூள் - அரை டீஸ்பூன் சோம்பு தூள் - அரை டீஸ்பூன் கரம் மசாலா - அரை டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிதளவு செய்முறை :   வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.   கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளித்த பின் சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.   வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பின், அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, மிளகு தூள், சீரக தூள்...

சிக்கன் சுக்கா வறுவல்

 சிக்கன் சுக்கா வறுவல் சிக்கன் சுக்கா வறுவல் வறுவல் வகைகளில் மிகவும் சுவையான சிக்கன் சுக்கா வறுவல். செட்டிநாடு மசாலா கலவையில் சிக்கனை வறுத்து சாப்பிட்டுப் பாருங்கள், ருசி நாக்கில் தாண்டவம் ஆடும். தேவையான பொருட்கள் சிக்கன் - 1/2 கிலோ வெந்தயம் - ஒரு டீஸ்பூன் பட்டை, லவங்கம், ஏலக்காய் - 4 மிளகு, சோம்பு, சீரகம் - தலா 2 டீஸ்பூன் மராட்டி மொக்கு - 3 அன்னாசிப்பூ - 3 கடற்பாசி - 5 இதழ் தனியா - 4 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 6 பச்சைமிளகாய் - 4 இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன் வெங்காயம் - 250 கிராம் (நறுக்கியது) தக்காளி - 250 கிராம் (நறுக்கியது) மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப கொப்பரைத் தேங்காய் - தேவைப்பட்டால் சேர்க்கலாம். செய்முறை :   வாணலியை அடுப்பில் வைத்து தனியா, மிளகாய், லவங்கம், ஏலக்காய், பட்டை, கடல்பாசி, மிளகு, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை (தேவைப்பட்டால் கொப்பரைத் தேங்காய் சேர்க்கலாம்) ஆகியவற்றை வெறுமனே வறுத்து ஆற வைத்து பொடி செய்து கொள்ளவும்.   அடுப்பில் மற்றொரு பாத்திரத்தை வைத்து ஒரு குழிக்கரண்டி எண்ணெய்...