Skip to main content

Posts

Showing posts from May, 2017

செட்டிநாடு இறால் குழம்பு

செட்டிநாடு இறால் குழம்பு!!!😍😍😍 செட்டிநாட்டு சாப்பாடு என்றாலே சுவை தான் , இந்த சுவையில் மயங்காத ஆளே இல்லை,இந்த சுவைக்கு காரணம் செயற்கையான சமையல் பொருட்களை( ajinomoto ,soya sauce) வைத்து சமைக்கவே மாட்டார்கள்,அனைத்தும் இயற்க்கையான சமையல் பொருட்கள் தான்.அதனால் தான் செட்டிநாடு சாப்பாடு மிக பிரபலமானது . 🍲🍲😋😋🍲🍲  தேவையான பொருட்கள்:😋 இறால் - 400 கிராம்  மிளகு - 1 டீஸ்பூன்  சீரகம் - 1 டீஸ்பூன்  வெந்தயம் - 1 டீஸ்பூன்  கடுகு - 1 டீஸ்பூன்  கசகசா - 1 டீஸ்பூன்  பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)  தக்காளி - 1 (நறுக்கியது)  பூண்டு - 5 பல் (அரைத்தது) பச்சை மிளகாய் - 5  மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்  தேங்காய் - 1/2 கப் (துருவியது)  எண்ணெய் - தேவையான அளவு செய்முறை:  முதலில் இறாலை நன்கு கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் உப்பை சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க விட்டு , பின் அதில் உள்ள நீரை வடிகட்டி விடவும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம் மற...

செட்டிநாடு பெப்பர் சிக்கன் வறுவல்

செட்டிநாடு பெப்பர் சிக்கன் வறுவல் தேவையான பொருட்கள் : சிக்கன் அரை கிலோ எண்ணெய் - 3 ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் உப்பு - 2 ஸ்பூன் தயிர் - 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன் தாளிக்க தேவையானவை க.மிளகாய் - 4 ஸ்பூன் மிளகு - 1/2 ஸ்பூன் பூண்டு - 10 பல் கறிவேப்பிலை - சிறிது அரைக்க தேவையானவை  : க.மிளகாய் அல்லது மிளகாய் தூள் - 3 ஸ்பூன் மிளகு - 1 1/2 ஸ்பூன் முழு மல்லி அல்லது தனியா தூள் - 2 ஸ்பூன் சீரகம் - 1 ஸ்பூன் செய்முறை : சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் வடிகட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளைப் போட்டு மஞ்சள் தூள், உப்பு, தயிர், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிரட்டி ஊற வைக்கவும். வாணலியில் மிளகு, சீரகம், க.மிளகாய், மல்லி ஆகியவற்றை போட்டு வறுக்கவும். வறுத்த பொருட்களை எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை போட சிக்கனை ஒரு முறை நன்கு கிளறி விட்டு மூடி வைத்து வேக விடவும். மற்றொரு சிறிய...

செட்டிநாட்டு சுவையான டைமண்ட் பிஸ்கேட்

டைமண்ட் பிஸ்கேட் செய்வது மிக எளிது மாலை நேரத்தில் காப்பி, டீ க்கு ஏற்ற ஸ்னாக்ஸ்  தேவையான பொருட்கள் கடலை மாவு – அரை கப் மைதா மாவு – ஒரு கப் பச்சரிசி மாவு – ஒரு கப் சீரகம் – அரை டீஸ்பூன் மிளகாய் தூள் – ஒரு தேகரண்டி உப்பு – தேவைகேற்ப பெருங்காயம் – கால் டீஸ்பூன் ஓமம் – ஒரு டீஸ்பூன் வெள்ளை எள்ளு – எட்டு டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு செய்முறை ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, மைதா மாவு, அரிசி மாவு, சீரகம், மிளகாய் தூள், உப்பு, பெருங்காயம், ஓமம், வெள்ளை எள்ளு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல் பிசைந்து, திக்காக திரட்டி, டைமன்டு வடிவில் சின்ன சின்னதாக வெட்டி கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். டைமண்ட் பிஸ்கட் ரெடி !!!குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடுவார்கள்...  

செட்டிநாடு சாம்பார் பொடி தயாரிக்கும் முறை

செட்டிநாடு சாம்பார் பொடி தென் இந்தியாவில் புகழ் பெற்றது சாம்பார், பாரம்பரிய உணவான இந்த சாம்பார் அன்றாட உணவில் முக்கிய இடம்வகிக்கிறது. சாம்பாரின் சுவை ரகசியம் சாம்பார் பொடி, இந்த சாம்பார் பொடி கூடுதல் சுவையும், மனமும் அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. தேர்தெடுக்கப்பட்ட மசாலா பொருட்களை குறிப்பான விகிதத்தில் கலந்து பக்குவமாய் வறுத்து அரைப்பதே இந்த செட்டிநாடு சாம்பார் மசாலாவின் தனிச்சிறப்பு. கடைகளில் கூடுதல் விலைக்கு வாங்கும் சாம்பார் பொடியை விட பல மடங்கு பயனளிக்கக்கூடியது, கணிசமும் அதிகம். இதை ஆறு மாதம் வரை காற்று புகாத கொள்கலனில் அடைத்து வைத்து பயன்படுத்தலாம். இது சாம்பார், காரக்குழம்பு கூட்டு, மசாலா வகை, பொரியல்,பச்சடி,மற்றும் சைவம், அசைவம் இரண்டுக்கும் ஏற்றது . தேவையான பொருட்கள் : சிவப்பு மிளகாய் – 1 கிலோ மல்லி – 1 கிலோ சோம்பு -200 கிராம் சீரகம் – 200 கிராம் வெந்தயம்- 100 கிராம் பெருங்காயம் – 50 கிராம் மஞ்சள் -50 கிராம் மிளகு – 50 கிராம் கடலை பருப்பு-100 கிராம் துவரம் பருப்பு- 50 கிராம் பச்சரிசி – 50 கிராம். செய்முறை : ஒவ்வொன்றையும் தனித்தனியாக வாணலியில் எண்ணெய...

காய் மண்டி

காய் மண்டி தேவையானவை:   அரிசி கழுவிய கெட்டியான மண்டி (கழுநீரைத்தான் செட்டிநாட்டில் மண்டி என்போம்) 6 கப், கத்தரிக்காய் 1, முருங்கைக்காய் பாதி, கீரைத்தண்டு 6 துண்டு, வாழைக்காய் பாதி, வள்ளிக்கிழங்கு அல்லது உருளைக்கிழங்கு 4 துண்டுகள், மாங்காய் 4 துண்டுகள் அல்லது மாங்காய் வற்றல் 6, கூழ்வற்றல் 6, வறுத்த தட்டைப்பயறு கால் கப், பச்சை மிளகாய் 7, சின்ன வெங்காயம் 15, பலா விதை 5, உப்பு தேவைக்கேற்ப, புளி எலுமிச்சை அளவு. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், பெருங்காயம் 1 சிட்டிகை, காய்ந்த மிளகாய் 1, எண்ணெய் 3 டீஸ்பூன். செய்முறை:  கீரைத்தண்டையும், முருங்கைக்காயையும் நீளத் துண்டுகளாக நறுக்கவும். கத்திரிக்காய், வாழைக்காய், உருளைக்கிழங்கை சதுரத் துண்டுகளாக நறுக்கவும். கூழ்வற்றல், மாவற்றலை வெந்நீரில் ஊறவைக்கவும். சின்ன வெங்காயத்தை நறுக்கி, பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளவும். பலா விதையைத் தோல் நீக்கி, இரண்டாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கெட்டியான அரிசி மண்டி ஒரு கப் ஊற்றி, புளியை ஊறவைத்துக் கரைத்து வடிகட்டிக்கொள்ளவும். மீதமுள்ள மண்டியை கொதிக்கவிட்டு, முதலில் தட்ட...

கோசுமல்லி

கோசுமல்லி இந்த வகையான ரெசிபி சமைப்பதற்கு மிக எளிமையான ஒன்று... தேவையானவை:  பெரிய, விதையுள்ள கத்திரிக்காய் 2, சின்ன வெங்காயம் 15, பச்சை மிளகாய் 2, தக்காளி 1, உப்பு தேவைக்கேற்ப, புளி எலுமிச்சை அளவு, மல்லித்தழை சிறிதளவு, தாளிக்க:  கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், பெருங்காயம் 1 சிட்டிகை, காய்ந்த மிளகாய் 2, எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன். செய்முறை:  சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயைக் கீறவும். தக்காளி பொடியாக நறுக்கவும். உப்பையும் புளியையும் 2 கப் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டிக்கொள்ளவும். கத்திரிக்காயைக் காம்பை நீக்கி, நான்காக நறுக்கி, வேகவைத்துக் கொள்ளவும். வெந்ததும், தோல் நீக்கவும். கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீரில், வெந்த கத்திரிக்காயைப் போட்டு, கையால் நன்கு கரைத்து, சக்கையைப் பிழிந்து எடுத்துவிடவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிப்பவற்றைப் போட்டு சிவந்ததும், தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும், கரைத்து வைத்திருக்கும் புளி + கத்திரிக்காய் கலவையை ஊற்றி, கொதித...

மாதுளை முத்து தயிர்ப்பச்சடி

மாதுளை முத்து தயிர்ப்பச்சடி தேவையானவை:  மாதுளை முத்துக்கள் 1 கப், தயிர் ஒன்றரை கப், பெரிய வெங்காயம் சிறியதாக 1, பச்சை மிளகாய் 2, உப்பு தேவைக்கேற்ப. செய்முறை:  வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். பச்சை மிளகாயை நீளமாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயம், உப்பு, பச்சை மிளகாய் மூன்றையும் சேர்த்து பிசறி வைத்துவிடவும். சிறிது நேரம் கழித்து, அதில் தயிரை கலக்கவும். பரிமாறப்போகும் நேரத்தில் மாதுளை முத்துக்களையும் கலந்து பரிமாறவும். கண்ணைக் கவரும் நிறத்தில், பிரமாதமான சுவை கொண்ட தயிர் பச்சடி இது. செட்டிநாட்டுக் கல்யாண விருந்துகளில் பிரபலமானது.

செட்டிநாடு மட்டன் வறுவல்

செட்டிநாடு மட்டன் வறுவல் Delicious recipe தேவையான பொருட்கள் : மட்டன் கலவைக்கு .. . மட்டன் - 500 கிராம் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செட்டிநாடு மசாலாவிற்கு. .. பேபி வெங்காயம் - 4 பூண்டு - 5 பல் மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கிராம்பு - 2 பட்டை - 1 இன்ச் துண்டு பிரியாணி இலை - 1 கறிவேப்பிலை - 10 மிளகு - 8 பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் சோம்பு - 1 டீஸ்பூன் கசகசா - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: மட்டனை நன்கு கழுவி, அதோடு மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், உப்பு போன்றவற்றை சேர்த்து பிசைந்து, தனியாக ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பேபி வெங்காயம் மற்றும் பூண்டை சேர்த்து வதக்க வேண்டும்...

செட்டிநாடு நண்டு மசாலா

 செட்டிநாடு நண்டு மசாலா நீங்கள் ஆசை பட்டதை வாங்கி சமைத்து குடும்பத்திற்கு பரிமாறிவிட்டு நீங்கள் சாப்பிட்டு பாருங்கள் ,அந்த "ருசியும் திருப்தியும் " எந்த ஹோட்டல் க்கு போனாலும் கிடைக்காது. இது நிதர்சனமான உண்மை... இந்த ருசிகரமான நேரத்தில்  செட்டிநாடு நண்டு மசாலா வறுவல் எப்படி செய்வது என்று பார்ப்போம்...   தேவையான பொருள்கள்:     நண்டு  - 500 கி     பெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது) – 1       தக்காளி (பொடியாக நறுக்கியது) – 2 அல்லது 3      மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி     உப்பு - தேவையான அளவு அரைத்துக் கொள்ள:     தேங்காய் – 1 மேசைக்கரண்டி     பச்சை மிளகாய் - 2 அல்லது 3      பூண்டு – 15 பல்     மிளகு – 1 டேபிள்ஸ்பூன்     சோம்பு – 1 தேக்கரண்டி     கசகசா  - 1 தேக்கரண்டி தாளிக்க:     பட்டை - சிறிய துண்டு     கல் பாசி – சிறிது ...

செட்டிநாடு கந்தர் அப்பம்

  செட்டிநாடு கந்தர் அப்பம்😙 கந்தர் அப்பம் செய்வது மிக எளிது, தாய்மார்கள் தன் பிள்ளைகளுக்கு மாலை நேரத்தில் இதை செய்து கொடுக்கலாம், டிவி பார்த்துக்கொண்டே இதை சாப்பிட்டால் ஆனந்தமாய் இருக்கும், இந்த அருமையான கந்தர் அப்பத்தை எப்படி செய்வது என்று பார்ப்போம் . தேவையானவை : பச்சரிசி – 1கப் உளுந்து – 1/4கப் வெந்தயம் -2டேபிள்ஸ்பூன் தேங்க்காய்த்துருவல் – 1கப் வெல்லம் – 1கப் எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை: பச்சரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் ஓன்றாக ஊறவைத்து தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். இறுதியில் வெல்லம், தேங்காய்த்துருவல் போட்டு அரைத்து ஏலம் சேர்த்து மிதமான சூட்டில், ஒன்று ஒன்றாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

செட்டிநாடு சிக்கன் பிரியாணி

செட்டிநாடு சிக்கன் பிரியாணி   தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி - அரைகிலோ சிக்கன் - 1/2 கிலோ (பெரிய துண்டுகள்), பெரிய வெங்காயம் – 2 , தக்காளி - 3 பச்சை மிளகாய் – 5, இஞ்சி பூண்டு விழுது – 3 தேக்கரண்டி, தேங்காய் பால் – 2 கப், தண்ணீர் – 3 கப் கொத்தமல்லி, புதினா - 1/2 கப் தயிர் - 1/2 கப் மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ் பூன் மிளகாய் தூள் - 1/2 டீ ஸ்பூன் கரம் மசாலா தூள் - 1/4 டீ ஸ்பூன் பட்டை - 2 துண்டுகள் கிராம்பு - 5 பிரியாணி இலை - 1 ஏலக்காய் - 3 எண்ணெய் - 100 மில்லி நெய் - 3 தேக்கரண்டி உப்பு தேவையான அளவு பிரியாணி செய்முறை:  அரிசியை கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும். தேவையான பொருட்களை எடுத்து தயாறாக வைக்கவும். முதலில் சிக்கனை சிறிதளவு உப்பு, ஒரு டீ ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது சிறிதளவு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து தண்ணீர் அரைகப் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும் வரை வேகவிடவும். பின்னர் சிக்கனை தனியாக எடுத்து வைக்கவும். குக்கரில் எண்ணெய் 2 டீ ஸ்பூன் தேக்கரண்டி நெய் விட்டு காய்ந்ததும் பச்சை மிளகாயை முழுதாக போட்டு லேசாக மூடிவைக்கவும். பின்னர...

செட்டிநாடு நெத்திலி மீன் குழம்பு

 நெத்திலி மீன் குழம்பு!!!🙂 காரைக்குடி அருகில் உள்ள கிராமங்களில் நெத்திலி மீன் குழம்பு பேமஸ் ,அதுவும் குளத்தில் மீன் பிடித்த கையோடு அதை சமைத்து சாப்பிட்டால் அந்த ருசி ஒரு வாரத்திற்கு நாக்கில் நிற்கும், இப்படி பட்ட ருசியான உணவை எப்படி செய்வது என்று கற்றுக்கொள்வோமே...    தேவையானவை :   நெத்திலி மீன் – 1/2 கிலோ சிறிய வெங்காயம் – 150 கிராம் தக்காளி – 4 மிளகாய்தூள் – 1 டேபிள் ஸ்பூன் தனியாதூள் – 1 1/2 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் – 1 இஞ்சி – 1 சிறிய துண்டு பூண்டு – 7 பல் தேங்காய் பால் – 1 டம்ளர் வெந்தயம் – 1 டீஸ்பூன் கொத்தமல்லி தழை – 1 சிறிதளவு எண்ணெய் – தேவையானது உப்பு – தேவையான அளவு சோம்பு – 1 டீஸ்பூன் புளி – எலுமிச்சை அளவு   செய்முறை:   மீனை சுத்தம் செய்து லேசாக உப்பு, மஞ்சள் தூவி கிளறி 15 நிமிடம் ஊற வைக்கவும். வெங்காயத்தை இரண்டாக நறுக்கவும். தக்காளியை நான்காக நறுக்கவும். இஞ்சியை விழுதாக அரைக்கவும்.  வாணலியில் எண்ணெய் ஊற்றி, வெந்தயம், சோம்பு தாளித்து நறுக்கிய வெங்காயம், பூண்டு இஞ்சி விழுது சேர்த்து நன்கு வதக்கவும். புளியை கரைத்து ஊற்றவும். இத...

Finger Fish Fry

Finger Fish Fry    😍😍😍  தேவையானவை :     விரல் நீள மீன் துண்டுகள் - 20     மைதா - ஒரு கப்     உப்பு - 1 1/2 ஸ்பூன்     கார்ன் ஃப்ளார் - 1/4 கப்     ப்ரெட் க்ரம்ப்ஸ் அல்லது ரஸ்க் தூள் - ஒரு கப்     எலுமிச்சை - 1/2 மூடி     எண்ணெய் - 250 மி.லி. அல்லது 8 மேஜைக்கரண்டி   செய்முறை :     மீன் துண்டுகளை எலுமிச்சை சாறு, உப்பு 1/2 ஸ்பூன் போட்டு பிரட்டி வைக்கவும்.     மைதா மாவு, கார்ன் ஃப்ளார், உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவுக்கு கரைப்பது போல் கரைத்து வைக்கவும்.     அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.     மீன் துண்டங்களை மாவில் நனைத்து உடனே ப்ரெட் க்ரம்ப்ஸ் அல்லது ரஸ்க் தூளில் பிரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு ஒரு நிமிடம் கழித்து திருப்பி போட்டு மேலும் ஒரு நிமிடம் வைத்திருந்து பொரித்து எடுக்கவும்.     இதை சாஸுடனோ அல்லது பச்சை வெங்காயத்தை மெலிதான ஸ்லைஸ்...

செட்டிநாடு மீன் வறுவல்

செட்டிநாடு செய்முறையில் தயாரிக்கப்படும் இந்த மீன் வறுவல் செய்வதற்கான குறிப்பு.🙂 தேவையான பொருட்கள்:     மீன் – 1 /2 கிலோ     மிளகாய்த்தூள் – 4  தேக்கரண்டி     தனியாத்தூள் – 5  தேக்கரண்டி     மஞ்சள்தூள் – 1  தேக்கரண்டி     எலுமிச்சம்பழம் – 1     மிளகு – 2  தேக்கரண்டி     காய்ந்த மிளகாய் – 4     கடுகு – 1  தேக்கரண்டி     கடலைப்பருப்பு – 3  தேக்கரண்டி     உளுத்தம்பருப்பு – 3 தேக்கரண்டி     கருவேப்பிலை – 2  கொத்து     எண்ணெய் – 1 1 /2 குழிக்கரண்டி     உப்பு – தேவையான அளவு   செய்முறை:     மீனை சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ளவும்.     மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, எலுமிச்சம்பழச்சாறைப் பிழிந்து பேஸ்ட் போல செய்து கொண்டு, அதில் மீனை நன்கு ஊற வைத்துக் கொள்ளவும். குறைந்தது...

சுவையான செட்டிநாட்டு மீன் குழம்பு

 சுவையான செட்டிநாட்டு மீன் குழம்பு தேவையான பொருட்கள்:     மீன் – 1 /2 கிலோ     புளி – எலுமிச்சை அளவு     பூண்டு – 15 பல்     சின்ன வெங்காயம் – 10     தக்காளி – 1     மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி     மிளகாய்த்தூள் – 1 1 /2 – 2 தேக்கரண்டி     மல்லித்தூள் – 3 தேக்கரண்டி     உப்பு – தேவையான அளவு அரைக்க தேவையான பொருட்கள்:     தேங்காய் துருவியது – 1 /4 கப்     மிளகு – 10 – 15     சீரகம் – 2 தேக்கரண்டி     கருவேப்பிலை – 2 கொத்து தாளிக்க தேவையான பொருட்கள்:     சீரகம் – 1 /2 தேக்கரண்டி     மிளகு – 1 /2 தேக்கரண்டி     வெந்தயம் – 10     கருவேப்பிலை – ஒரு கொத்து     நல்லெண்ணெய் – 1 /4 கப் செய்முறை:     புளியை 1 /2 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.   ...

குழி பணியாரம்

குழி பணியாரம் என்றாலே காரைக்குடி தான் ஞாபகம் வருகின்றது, இது அனைவரும் விரும்பக்கூடிய உணவாகும். 😊😊😊 சுவையான குழி பணியாரம் எப்படி செய்வது என்று பார்ப்போம் !!!    chettinadurecipe.blogspot.in தேவையானவை:  பச்சரிசி, புழுங்கலரிசி - தலா ஒரு கப், உளுந்து - அரை கப், ஜவ்வரிசி - கால் கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 3, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், கறி வேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு  - தேவையான அளவு. செய்முறை:  பச்சரிசி மற்றும் புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊற விடவும். 2 மணி நேரம் கழித்து நைஸாக அரைக்கவும். அரைக்கும்போது, 10 நிமிடம் ஊற வைத்த ஜவ்வரிசியை மாவுடன் சேர்த்து அரைக்கவும். உப்பு சேர்த்துக் கலக்கி, 5 - 6 மணி நேரம் புளிக்கவிடவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். வாணலி யில் எண்ணெய் சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப் பிலை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி மாவில் சேர்க்கவும். குழி பணியார...

இனிப்பு சீயம்

இனிப்பு சீயம் தேவையானவை:    பச்சரிசி, உளுந்து - தலா ஒரு கப், உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு. பூரணம் செய்ய:   தேங்காய் - ஒன்று, பொடித்த வெல்லம் - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - 2 டீஸ்பூன், நெய் - 3 டீஸ்பூன். செய்முறை:   தேங்காயைத் துருவிக் கொள்ளவும். வெல்லத்தை கரைத்து  வடிகட்டவும். வாணலியில் நெய் விட்டு, தேங்காய் துருவல் சேர்த்து ஈரம் போக கிளறவும். அதனுடன் கரைத்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்கி ஆறவிடவும். இதுதான் பூரணம். பச்சரிசி, உளுந்தை ஒன்றாக சேர்த்துக் களைந்து, ஒரு மணி நேரம் ஊறவிட்டு, பின் நைஸாக அரைத்து, உப்பு சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். கிளறி வைத்துள்ள பூரணத்தை சிறு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.  வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பூரணத்தை அரைத்து வைத்துள்ள மாவில் தோய்த்து, எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால்.... சுவையான இனிப்பு சீயம் தயார்!

செட்டிநாடு மிளகாய் சட்னி

"Chettinad மிளகாய் சட்னி என்றாலே இட்லி, தோசை கொஞ்சம் அதிகமாவே சாப்பிடுவோம்"...😙😙😙 அதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம் வாங்க !!! மிளகாய் சட்னி தேவையான பொருட்கள்: காய்ந்த மிளகாய் - 15 அல்லது 20,  புளி - சிறிய எலுமிச்சையளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு,  எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை:  வாணலியில்  சிறிதளவு எண்ணெய் ஊற்றி, மிளகாயை நிறம் மாறாமல் வறுக்கவும். அடுப்பை அணைத்து விட்டு புளி, உப்பு சேர்த்து வறுக்கவும். ஆறவிட்டு நைஸாக அரைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து,  அரைத்து வைத்திருக்கும் சட்னியில் சேர்க்கவும். குறிப்பு: சட்னியின் மேலே எண்ணெய் நிற்குமாறு இருக்க வேண்டும். "தேவைப்பட்டால் சிறிதளவு  பூண்டு சேர்த்துக்கொள்ளலாம்"  ரோஜாப்பூ நிறத்தில் இருக்கும் இதற்கு 'ரோஜாப்பூ சட்னி’ என்றே பெயர். பணியாரம், இட்லி, தோசைக்கு சிறந்த காம்பினேஷன்.

செட்டிநாடு பால் பணியாரம்

பால் பணியாரம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அருமையான ரெசிபி. 😍 அதிலும் செட்டிநாடு ஸ்டைல் பால் பணியாரத்தை பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால், அவர்கள் வயிறு நிறைவதோடு, அவர்கள் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். தொடர்ந்து படித்து வாருங்கள். இங்கு செட்டிநாடு பால் பணியாரத்தின் ஈஸியான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:   பச்சரிசி - 1/2 கப்  உளுத்தம் பருப்பு - 1/2 கப்  தேங்காய் பால் - 1 கப்  காய்ச்சிய பால் - 1/4 கப்  ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்  உப்பு - 1 சிட்டிகை  சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்  எண்ணெய் - தேவையான அளவு செய்முறை:  முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை நீரில் போட்டு 2-3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும். மாவானது கெட்டியாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டும்.   அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்...

KARAIKUDI CHETTINAD CUISINE

Chettinad cuisine is the cuisine of a community called the Nattukotai Chettiars, or Nagarathars as they call themselves, from the Chettinad region of Tamil Nadu state in South India. Chettinad cuisine is perhaps the most renowned fare in the Tamil Nadu repertoire. It uses a variety of spices and the dishes are made with fresh ground masalas. Chettiars also use a variety of sun dried meats and salted vegetables, reflecting the dry environment of the region. Most of the dishes are eaten with rice and rice based accompaniments such as dosais, appams, idiyappams, adais and idlis. The Chettiars through their mercantile contacts with Burma, learnt to prepare a type of rice pudding made with sticky red rice. Chettinad cuisine offers a variety of vegetarian and non-vegetarian dishes. Some of the popular vegetarian dishes include idiyappam, paniyaram, vellai paniyaram, karuppatti paniyaram, paal paniyaram, kuzhi paniyaram, kozhakattai, masala paniyaram, adikoozh, kandharappam, ...